×

முடிவுக்கு வந்தது பஸ் ஸ்டிரைக்… பேச்சுவார்த்தையில் சுமுகம்!

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 9 தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு திரும்பாவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்தாலும் கூட போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிடில் போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பயணிகள் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள்
 

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 9 தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு திரும்பாவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்தாலும் கூட போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிடில் போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் பயணிகள் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்க தொடங்கினார். தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை அடுத்து அரசு இன்று பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்களை அழைத்தது. அதன்படி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் பங்கேற்றனர். தற்போது இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து போராட்டத்தைத் திரும்பப்பெற்றுக்கொள்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.