×

சென்னையில் 161 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை – மகிழ்ச்சியில் மக்கள்!

சென்னையில் 161 நாட்களுக்கு பின் மாநகர அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் பொது போக்குவரத்து கடந்த 5 மாத காலமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்து, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதை தொடர்ந்து தமிழக அரசு தற்போது ஊரடங்கு தளர்வு அளித்துள்ளது. அதில் மீண்டும் பொது போக்குவரத்தை அரசு துவங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் மாநகர அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கி
 

சென்னையில் 161 நாட்களுக்கு பின் மாநகர அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் பொது போக்குவரத்து கடந்த 5 மாத காலமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்து, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

Private Bus

இதை தொடர்ந்து தமிழக அரசு தற்போது ஊரடங்கு தளர்வு அளித்துள்ளது. அதில் மீண்டும் பொது போக்குவரத்தை அரசு துவங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் மாநகர அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் ஆர்வத்துடன் பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர். சென்னை மாநகரப் பேருந்துகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன.

பிற மாவட்டங்களிலும் தொடங்கி நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளில் செல்ல முடியும். வெளி மாவட்டத்திற்கு செல்ல அனுமதி இல்லை