×

ஜூன் மாதம் பெறப்பட்ட மாதாந்திர பயண சலுகை அட்டையை 15ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம்!

மதுரை மாநகரில் கடந்த ஜூன் மாதம் பெறப்பட்ட மாதாந்திர பயண சலுகை அட்டையை வரும் 1ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என போக்குவரத்து கழக மதுரை மண்டலம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

மதுரை மாநகரில் கடந்த ஜூன் மாதம் பெறப்பட்ட மாதாந்திர பயண சலுகை அட்டையை வரும் 1ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என போக்குவரத்து கழக மதுரை மண்டலம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதமும் மாவட்டத்திற்குட்பட்ட பேருந்து சேவைக்கு மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. அப்போது ஜூன் 16 ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரையிலான சலுகை கட்டண பயண அட்டை வழங்கப்பட்டது இந்நிலையில் கொரோனோ பொது முடக்கம் காரணமாக கடந்த ஜூன் 26ம் தேதியுடன் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் 12 நாட்கள் மட்டுமே பயண அட்டை பயன்படுத்தப்பட்ட நிலையில் அந்த இழப்பினை ஈடு செய்யும் வகையில் ஜூன் மாதத்திற்கான சலுகை கட்டண பயண அட்டையை நாளை முதல் 1-ஆம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல மேலாளர் முருகேசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இந்த நடைமுறை மதுரை மாநகரத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் அடுத்த மாதத்திற்கான சலுகை கட்டண பயண அட்டையை வரும் 5ஆம் தேதி முதல் புதுப்பித்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் மட்டும்  சலுகை பயண கட்டண அட்டையை 16,882 பேர் பயன்படுத்திவருகின்றனர்.