×

#BREAKING திடீரென லாரி குறுக்கே வந்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்து! 30 பேர் காயம்

 

கல்பாக்கம் அடுத்த மேல்பெருமாள்சேரி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், திடீரென லாரி குறுக்கே வந்ததால் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஜெ.சி.பி. மூலம் பஸ் உடைத்து காயமடைந்த 30 பயணிகள் உள்ளிட்ட 60 பேர் மீட்கப்பட்டனர். 

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த மேல்பெருமாள்சேரி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி தமிழ் நாடு  அரசு பேருந்து ஒன்று 60 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மணல் லாாி குறுக்கே வந்ததால் அரசு பேருந்து ஓட்டுநர் ரவி என்பவர் பேருந்தை ஓட்டி வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்ள்..என கூச்சலிட்டனர்.    பிறகு அப்பகுதி சதுரங்கப்பட்டினம் போலீசார், பொதுமக்கள் சிலர் தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார்  ஜெ.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த பஸ்ஸின் கண்ணாடியை முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கண்ணாடிகளை உடைத்து காயமடைந்த பயணிகள் 30 பேர் உள்ளிட்ட 60 பயணிளை மீட்டனர். பிறகு 30 பேர் லேசான காயமடைந்த  பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள வெங்கப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடையாத பயணிகள் மாற்று பேருந்து மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். 

குறிப்பாக மேல்பெருமாள்சேரி  இ.சி.ஆர். சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக பணிகள் நடந்து வருவதால், ஆங்காங்கு பள்ளங்கள் தோண்டி வைத்துள்ளதால் வாகனங்கள் குறுக்கும், நெடுக்கமாக செல்லும்போது பக்க வாட்டில் வரும் வாகனங்களின் விவரங்களை சரிவர கணிக்க முடியாமல் திணறும் வாகன ஓட்டிகள் திடீரென நிலைதடுமாறி இது போன்ற விபத்துகளில்  சிக்குவது குறிப்பிடத்தக்கது...