×

டிப்போவிலேயே உயிரை மாய்த்துக்கொண்ட அரசுப்பேருந்து ஓட்டுநர்.. என்ன காரணம்?!

கொரோனா பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ரயில் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட எந்த பொதுப் போக்குவரத்து சேவையும் மக்களின் பயணத்துக்காக இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்காக ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரியிலும் கடந்த மாதம் பேருந்து சேவைகள் தொடங்கியது. அங்கும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிகப்படியான பணிச்சுமையால் அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை
 

கொரோனா பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ரயில் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட எந்த பொதுப் போக்குவரத்து சேவையும் மக்களின் பயணத்துக்காக இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்காக ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரியிலும் கடந்த மாதம் பேருந்து சேவைகள் தொடங்கியது. அங்கும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிகப்படியான பணிச்சுமையால் அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் புதுச்சேரி கிளையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் ராமராஜ். இவர் கடந்த சில நாட்களாக பணிச்சுமையால், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் இன்று காலை விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக டிப்போவில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பணிச்சுமை அதிகமாக இருப்பதாக இவர் உயரதிகாரிகளிடம் கேள்வி கேட்டதாகவும், அதற்காக இவரை அவர்கள் திட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்த ராமராஜை கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஓட்டுனர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அதிகாரிகள் திட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.