சட்ட நகலை எரிப்பதெல்லாம், ஒரு மாநில முதல்வருக்கு அழகில்லை - ஹிந்து முன்னணி தலைவர்..!!
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவை பார்லி.,யில் மத்திய அரசு தாக்கல் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை.
ஆனால், தி.மு.க., தலைமை, வன்முறையை துாண்டும் வகையில் மிரட்டல் விடுக்கிறது; இது ஜனநாயக விரோதம். தி.மு.க.,விற்கு, 39 எம்.பி.க்கள் உள்ளனர். சட்ட மசோதாவில் பிரச்னை இருந்தால் சபையில் பேசலாம். சட்ட நகலை எரிப்பதெல்லாம், ஒரு மாநில முதல்வருக்கு அழகில்லை; இது சட்ட விரோதம்.
இதுபோன்ற பேச்சையும் செயல் களையும் தேர்தல் கமிஷன் கண்டிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்த போராட்டம் நடத்த எப்படி அனுமதி பெற்றனர். தமிழக அரசு அதிகாரிகளும், போலீசாரும் இன்னும் தி.மு.க.,வை ஆளுங்கட்சியாக கருதுகிறார்களா? தமிழகத்தில் அசாதாரண சூழலை உருவாக்கி, தேர்தலை தள்ளி வைக்க சதி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் தி.மு.க., எதிர்க்கிறது. இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யும் முன்பே, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இங்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தேர்தல் தோல்வி பயம் தான் காரணம். மக்கள் தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.