சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை உயிரிழப்பு
Jan 15, 2025, 16:15 IST
சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு காளைகள் முட்டி கொண்டதில் ஒரு காளை பரிதாபமாக உயிரிழந்தது.
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் களம் இறக்க 775 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு காலை 8 மணி முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாடும் கால்நடை துறையினர் பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர். அப்போது திருச்சி மாவட்டம் திருவளர்சோலையை சேர்ந்த அப்பு என்பவரது மாடு வாடிவாசல் வழியே வந்தது. அப்போது ஏற்கனவே வெளியேறியே மாடு அப்புவின் மாட்டை முட்டியது இதில் அந்த மாடு களத்திலேயே சுருண்டு விழுந்தது.