×

இனி 27 நாட்களில் கட்டட அனுமதி..! - சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!

 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வோம் என, முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 

இதன் அடிப்படையில்,சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் பிறப்பித்த உத்தரவு:

* சென்னையில் கட்டுமான திட்ட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை பதிவு செய்ததில் இருந்து, 7 நாட்களுக்குள் உதவி செயற் பொறியாளர் கள ஆய்வை முடிக்க வேண்டும்

* கள ஆய்வு முடிந்த இரண்டு நாட்களுக்குள், அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளை அடுத்த ஐந்து நாட்களில் முடிக்க வேண்டும்

* சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, கூடுதல் விபரங்கள், ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக மட்டும் பெற அடுத்த இரண்டு நாட்களை பயன்படுத்தலாம்

* விளக்கம், கூடுதல் ஆவணத்தை விண்ணப்பதாரர் அளிக்க, 7 நாட்கள் அவகாசம் கொடுக்கலாம். ஆன்லைன் முறையில் கட்டணம் வசூலிக்க, அடுத்த மூன்று நாட்களை பயன்படுத்தலாம்

* அடுத்து ஒரு நாளில் டிஜிட்டல் முறையில் கட்டட அனுமதி வரைபடத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன்படி, 27 நாட்களில் கட்டுமான திட்ட அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

இதில், அனைத்து ஆவணங்களும் சரியாக தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு, 18 நாட்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதேபோல், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்த திட்டங்களுக்கு, கட்டுமான பணி உரிமத்தை ஏழு நாட்களில் வழங்க வேண்டும். இந்த நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.