×

#BUDGET2026 நிதிப் பகிர்வில் மாற்றமில்லை

 

16ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான வரி பகிர்வில் எந்த மாற்றமும் இல்லை. மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41% ஆகவே தொடரும். மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் மத்திய பட்ஜெட்டில் அது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இதேபோல் பங்குச் சந்தையில் நிலவும் அதிகப்படியான ஊக வணிகத்தைக் (Speculative Trading) கட்டுப்படுத்தும் நோக்கில், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) மீதான வரிகள் உயர்கிறது. ஃபியூச்சர்ஸ் மீதான வரி 0.02%ல் இருந்து 0.05% ஆகவும், ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான வரி 0.1%ல் இருந்து 0.15% ஆகவும் உயர்த்தப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில், தேங்காய் விளைச்சலை ஊக்குவித்து, உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய முந்திரியை உயர்மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டாக (Premium global brand) மாற்ற முயற்சி எடுக்கப்படும். மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும், 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும். இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படும். பல முக்கியமான சுற்றுலா தலங்களில் சுற்றுலா வழிக்காட்டிகளை உருவாக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இது புதிய வேலைவாய்ப்புகளையும், 'கன்டென்ட்’ கிரியேட்டர்களையும் உருவாக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.