#Budget Breaking : 2 லட்சம் இலவச மின் இணைப்புகள்.. பேரவையில் அமைச்சர்..!!
Feb 17, 2026, 13:48 IST
2026-2027-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/HWmPs4bXx8o?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/HWmPs4bXx8o/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">
* கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை பேரிடருக்காக ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 25.36 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்.
* 150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மின்னணு சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
* புதிதாக 2 லட்சம் விவசாயிகளின் நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
* 150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மின்னணு சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
* நுண்ணீர் பாசனத்திட்டத்தை பயன்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
* 5 ஆண்டுகளில் குளிர் பதனிடும் கிடங்குகளுக்காக 27 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
* 5 ஆண்டு காலத்தில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,894 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* இ-வாடகை செயலி மூலம் 3,816 வேளாண் இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டது.
* கடந்த 5 ஆண்டுகளில் 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* உழவர் சந்தைக்கு கொண்டுவரப்படும் காய்கறிகளின் அளவு தினமும் அதிகரித்து வருகிறது.
* உழவர் சந்தைகளில் சுமார் 4 லட்சம் மக்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.
* புவிசார் குறியீட்டுக்காக 41 விலைப்பொருட்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
* ஒன்பது பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
* கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக்கலை கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.
* நாகை, சிவகங்கை, கரூரில் புதிதாக அரசு வேளாண் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
* 30 ஆயிரம் நபர்களுக்கு தேனீ வளர்ப்பு மதிப்பு கூட்டு இயந்திரங்களை இயக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
* 150 விவசாயிகள் அயல் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
* இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களை உருவாக்க தனியாரிடமிருந்து 176 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
* பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3002 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.