×

ஆதரவற்றோரின் பசியை போக்கும் இனிய இல்லத்தரசி!

கோவையில் ஆதரவற்றோரின் பசியை போக்குவதற்காக 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி வருகிறார் இல்லத்தரசி. அந்த 20 ரூபாயை கொடுக்க முடியாதவர்கள் அதனை இலவசமாக வாங்கி செல்லலாம் என்றும் அவர் கூறுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்துவரும் சதீஷ்- சப்ரினா தம்பதியினர். இவர்கள் சாலையோர உணவகம் ஒன்றை நடத்திவருகிறார். மதியம் 12 மணி முதல் 3 மணிவரை இயங்கும் இந்த கடையில் 20 ரூபாய்க்கு பிரியாணி விற்றுவருகிறார். கடையின் முன்பு ஒரு பெட்டி
 

கோவையில் ஆதரவற்றோரின் பசியை போக்குவதற்காக 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி வருகிறார் இல்லத்தரசி. அந்த 20 ரூபாயை கொடுக்க முடியாதவர்கள் அதனை இலவசமாக வாங்கி செல்லலாம் என்றும் அவர் கூறுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்துவரும் சதீஷ்- சப்ரினா தம்பதியினர். இவர்கள் சாலையோர உணவகம் ஒன்றை நடத்திவருகிறார். மதியம் 12 மணி முதல் 3 மணிவரை இயங்கும் இந்த கடையில் 20 ரூபாய்க்கு பிரியாணி விற்றுவருகிறார். கடையின் முன்பு ஒரு பெட்டி வைத்து பிரியாணி பொட்டலங்களை வைத்துள்ள இந்த தம்பதியினர், “பசிக்குதா எடுத்துக்குங்க…” என கரும்பலகையில் எழுதிவைத்துள்ளார். 20 ரூபாய் கொடுத்து பிரியாணி வாங்க இயலாதவர்கள் இந்த உணவை இலவசமாக எடுத்து சென்று வயிறாறுகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சப்ரினா, “சாதாரண சாலையோர கடைகளில் குறைந்தது 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இருப்பினும் ஏழை, எளியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவும் வகையில் மதியம் 20 ரூபாய்க்கு பிரியாணி விற்றுவருகிறோம். அந்த ரூபாய்யை கூட கொடுக்க முடியாதவர்களுக்கு இலவசமாகவே வழங்குகிறோம்” என தெரிவித்துள்ளார்.