×

ரூ.441 கோடி செலவில் சேலத்தில் ஈரடுக்கு பாலம்.. நாளை திறந்து வைக்கிறார் முதல்வர்!

சேலத்தில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டதால் அதனை கட்டுப்படுத்த ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க கடந்த 2016 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் வழங்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அந்த பாலம் 7.8 கி.மீ தூரத்தில் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கும் பணி தொடங்கியது. அந்த மேம்பாலத்தில் 173 வலிமையான தூண்கள் அமைக்கப்பட்டு, ஒற்றை ஓடுதளம் 7மீ அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 அகலமும்
 

சேலத்தில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டதால் அதனை கட்டுப்படுத்த ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க கடந்த 2016 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் வழங்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அந்த பாலம் 7.8 கி.மீ தூரத்தில் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கும் பணி தொடங்கியது.

அந்த மேம்பாலத்தில் 173 வலிமையான தூண்கள் அமைக்கப்பட்டு, ஒற்றை ஓடுதளம் 7மீ அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 அகலமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் கீழே 7மீ அகலத்தில் சேவை சாலை அமைக்கப்பட்டு, அதிநவீன சிசிடிவி கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பணி நடந்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவியதால், பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் அனுமதிக்கப்பட்டு இறுதி கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் நாளை காலை இரண்டு அடுக்கு பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.