×

குடும்ப பிரச்சினை காரணமாக கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

 

ஒட்டன்சத்திரம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, காப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேவுகப்பெருமாள் (35). இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காந்திநகர் செக்குமேடு பகுதியில் குடியிருந்து, கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சேவகபெருமாள் அவரது மனைவி ராணி மீது சந்தேகம் ஏற்பட்டு கடந்த ஒரு மாத காலமாக பிரச்சனை இருந்து வந்தாகவும், அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு உறங்கி விட்டார்.

இந்நிலையில், இன்று அதிகாலை ராணி எழுந்து பார்க்கும் போது சேவுகப்பெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராணி அருகில் இருந்தவர்களின் உதவியோடு ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சேவகப்பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து மக்களும் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழும் இந்நேரத்தில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.