×

சென்னையில் கொரோனா தடுப்பூசி போடவும் லஞ்சம்!

சென்னை புழல் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் கொரோணா தடுப்பூசி போட லஞ்சம் வாங்கியவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை புழல் அருகே அரசுக்கு சொந்தமான நகர்புற சமுதாய நல மருத்துவமனை உள்ளது. இதில் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த தினகரன் மற்றும் பிரசாத் என்ற இருவர் மருத்துவமனை ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இன்று காலை சென்னை கல் பாளையத்தை சேர்ந்த நந்தகோபால் என்பவர் தனது மனைவியுடன் கொரோனா தடுப்பூசி போட அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்
 

சென்னை புழல் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் கொரோணா தடுப்பூசி போட லஞ்சம் வாங்கியவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை புழல் அருகே அரசுக்கு சொந்தமான நகர்புற சமுதாய நல மருத்துவமனை உள்ளது. இதில் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த தினகரன் மற்றும் பிரசாத் என்ற இருவர் மருத்துவமனை ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இன்று காலை சென்னை கல் பாளையத்தை சேர்ந்த நந்தகோபால் என்பவர் தனது மனைவியுடன் கொரோனா தடுப்பூசி போட அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களிடம் தடுப்பூசி போடும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தற்போது தடுப்பூசி, தற்போதைக்கு இருப்பு இல்லை எனவும், ரூபாய் 500 கொடுத்தால் வெளிச்சந்தையில் இருந்து தடுப்பு ஊசி வாங்கி வந்து செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

இதனை உண்மை என்று நம்பிய நந்தகோபால் இதுகுறித்து தனது மனைவியிடம் கூறி அவர்களுடைய செல்போன் கணக்கிலிருந்து ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு ரூபாய் 500 அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மேலும் ரூபாய் 300 கொடுக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் நந்தகோபால் இடம் கேட்டு உள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நந்தகோபால் அருகில் உள்ள தனது நண்பருக்கு தகவல் தெரிவிக்க அவர் இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். அவருக்கும் உரிய பதில் தராமல் ஊழியர்கள் வாக்குவாதம் செய்யவே இதுகுறித்து புழல் காவல் நிலையத்திற்கு நந்தகோபால் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஊழியர்களிடம் விசாரணை செய்யவே அவர்கள் இருவரும் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதனை அடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.