#BreakingNews | உருவாகிறது ‘முரசு’ புயல்..!! அடுத்த 24 மணி நேரம் ரொம்பவே முக்கியம்!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் 'முரசு' என்ற புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் இந்தப் புயலுக்கு, சர்வதேச விதிகளின்படி ஆசிய நாடுகளின் சுழற்சி முறை பெயரிடுதலின் கீழ் இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ என்ற தமிழ் பெயர் சூட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
புயல் காரணமாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் வலுவடையும் போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ வேகம் வரையிலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.