#BREAKING : விஜய் எனக்கு என்ன மாமனா? மச்சானா? நாங்கள் ஏன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் - டிடிவி தினகரன்..!!
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக யார் பொறுப்பேற்க போகிறார்கள் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் வேளையில், அரசியல் வட்டாரம் நொடிக்கு நொடி திருப்பங்கள் நிறைந்ததாக மாறியிருக்கிறது. தவெக தற்போது 116 உறுப்பினர்கள் ஆதரவுடன் இருக்கிறது. கூடுதலாக, இரண்டு உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினால், விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்பார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "எம்எல்ஏ காமராஜ் தவெகவுக்கு அளித்ததாகச் சொல்லப்படும் ஆதரவு கடிதத்தின் அசல் கடிதம் எங்கே? அசல் கடித்தான் தராதது ஏன்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது ; அமமுக எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை என கவர்னரிடம் நேற்று புகார் அளித்து இருந்தேன். அத்துடன், தவெக குதிரை பேரம் நடத்துகிறது என்றும் கவர்னரிடம் தெரிவித்தேன். ஆனால் காமராஜ் கையெழுத்திட்டதாக கூறும் அசல் கடிதம் எங்கே? காரில் அமரந்து கையெழுத்திட்டது போன்ற வீடியோவை எடுத்தது யார்? திமிரிலும், வன்மத்துடனும் தவெகவினர் வீடியோ வெளியிட்டுள்ளனர். எனது கட்சி எம்.எல்.ஏ. ஆதரவு அளித்திருந்தால் அவரை கவர்னர் மாளிகைக்கு அழைத்துச்செல்லாதது ஏன்.?
காமராஜ் காரில் கையெழுத்திடுகிறார் எனில் அவரை வீடியோ எடுத்தது விஜய்யா? ஆதவ் அர்ஜூனா? சிடி நிர்மல்குமாரா? செங்கோட்டையனா?
முதலமைச்சராவதற்கே இத்தனை போர்ஜரி, 420 வேலை செய்கிறீர்கள்.. ஆட்சி அதிகாரம் வருவதற்கு முன்னரே இத்தனை திமிரா, அகம்பாவமாக செயல்படுகிறார் விஜய்..
இந்த போர்ஜரி கடிதம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.
ஜனநாயகத்தில் ஆதரவை தாருங்கள் என தலைவர்களிடம் நேரில் கேட்க வேண்டுமே தவிர போர்ஜரி கடிதங்கள் மூலம் ஆதரவை உருவாக்கக் கூடாது
விஜய் கொடுத்திருக்கும் அனைத்து ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் அர்லேகர் ஆராய வேண்டும்.
எனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறி, எங்களது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த தவெகவினர் முயல்கின்றனர். தவெகவினர் என்னை மிரட்டவும். பயமுறுத்தவும் பார்க்கின்றனர். விஜய் 108 சீட் வென்றிருந்தால் எனக்கு என்ன.? விஜய் எனக்கு என்ன மாமனா? மச்சானா? நாங்கள் ஏன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? விஜய் பெரிய ஹீரோவாக இருந்தால் எனக்கு என்ன? காமராஜ் கையெழுத்திட்டதாக கூறி தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். முதல்-அமைச்சர் ஆவதற்காக விஜய் மோசடி செய்கிறார். மக்களுகு தவெக விளக்கம் அளிக்க வேண்டும்."
இவ்வாறு அவர் பேசினார்.