☰
×

#BREAKING : வாக்குப்பதிவு நிறுத்தம்..!! இடைத்தேர்தலில் பரபரப்பு..!!

 

மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி, தண்டரை புதுச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள விசில் சின்னத்தின் பட்டனில் மை வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

குறிப்பிட்ட கட்சியின் சின்னத்தின் மீது மை வைக்கப்பட்டதை கண்டித்து கட்சி தலைவர்களும் நிர்வாகிகளும் அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு முற்றிலும் தடைபட்ட நிலையில், அதிகாரிகள் இயந்திரத்தை சரிசெய்ததை தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது