×

#BREAKING : குடியரசுத் துணைத் தலைவருக்கான வாக்குப்பதிவு நிறைவு..!

 

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது 

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தின் எப்-101 அரங்கில் தொடங்கி மாலை 5 மணியோடு நிறைவு பெற்றது. இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியவுடன் முதல் ஆளாக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கைப் பதிவு செய்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.  மொத்தம் உள்ள 782 வாக்குகளில் 770 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் 12 பேர் புறக்கணித்தாகவும் கூறப்படுகிறது. 

சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, தேர்தல் முடிவு இன்றே அறிவிக்கப்பட உள்ளது. எம்பி.க்களின் ஆதரவு அடிபப்டையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.