×

#BREAKING : வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் அறிமுகம் - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு..!

 

'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' என்ற பெயரில் இல்லத்தரசிகள் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார்.

தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டத்திற்கு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு.
 

பனைவிதைகள்,பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனை பொருள் உற்பத்தி கூடாரங்கள் அமைப்பதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரிக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்தை அமைச்சர் வினோத் அறிவித்தார். இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.17,315 ஏக்கருக்கு விதைக் கரும்பு மானியம் வழங்க இந்த பட்ஜெட்டில் ரூ. 9.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்தார்.

விவசாயிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே முகவரி என்ற பெயரில் 8 மாவட்டங்களில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ. 27.82 கோடியில் அமைக்கப்படும்.

மாவட்டந்தோறும் வேளாண் கண்காட்சி மற்றும் தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாக்களை நடத்த இந்த பட்ஜெட்டில் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 3.56 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகளின் நலனுக்காக விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.7.1 கோடியில் அமைக்கப்படும்.