☰
×

#BREAKING : "அபூர்வ சகோதரர்கள்", "பேசும் படம்" தந்த மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!

 

பழம்​பெரும் இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95. உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் சிகிச்சை பலன் இன்றி பிரிந்தது.

.ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள உதயகிரியில் 1931ம் ஆண்டு செப்., 21ம் தேதி பிறந்தவர் சிங்கீதம் சீனிவாச ராவ். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர். சினிமா மீது தீராத காதல் கொண்டிருந்த இவர் புகழ்பெற்ற இயக்குநர் கே.வி.ரெட்டியிடம் இணை இயக்குநராக தன் பணியை தொடங்கினார். தெலுங்கில் 1972ல் வெளியான ‛நீதி நிஜாயிதி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தமிழில் இவர் இயக்கிய முதல்படம் 1974ல் 'திக்கற்ற பார்வதி'. முதல் தமிழ் படத்திற்கே இவருக்கு தேசிய விருது கிடைத்தது. ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சின்ன வாத்தியார், மகளிர் மட்டும், லிட்டில் ஜான் உள்ளிட்ட பல தமிழ் படங்களை இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தமிழில், ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை எக்​ஸ்​பிரஸ் ஆகிய படங்​களை இயக்​கி​யுள்​ளார்.

கடைசிகாலகட்டம் வரை சினிமாவை நேசித்தவர் சிங்கீதம் சீனிவாச ராவ். 95 வயதிலும் சிங்கீதம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். சில மாதங்களுக்கு முன் இந்த படம் வெளியானது. இத்திரைப்படம் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் மனிதர்களின் பேராசையையும் ஒரு மாயாஜால இசையுடன் இணைத்து நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமாக சொன்னது.

திக்கற்ற பார்வதி, புஷ்பக விமானா ஆகிய படங்களுக்காக இரண்டு முறை தேசிய விருதும், 6முறை ஆந்திர அரசின் நந்தி விருதும் பெற்றுள்ளார். தவிர பிலிம்பேர் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு விருதுகைளுயும் வென்றுள்ளார்

தென்னிந்திய சினிமாவில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.இந்தியாவின் முதல் டைம் டிராவல் படமான 'ஆதித்யா 369' படத்தை இயக்கியவர் இவர்தான்.

இதுமட்டுமல்லாமல், கிராபிக்ஸ், அனிமேஷன் போன்றவை தென்னிந்திய சினிமாவுக்குப் பெரியளவில் பரிச்சயமில்லாத சமயத்திலேயே, அப்படியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்.கமல்ஹாசனின் 100-வது படமான 'ராஜ பார்வை', 'பேசும் படம்', 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்' ஆகிய கல்ட் கிளாசிக் படங்களை இயக்கியதும் இவர்தான்.

இந்தாண்டு இவர் இயக்கத்தில் 'சிங் கீதம்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 94 வயதில் இப்படத்தை இயக்கி, ஹாலிவுட்டில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் செய்த சாதனையை முறியடித்தவர் இவர். இவருடைய மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

.இவருக்கு 1960ம் ஆண்டு லட்சுமி கல்யாணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வந்த இவரது இறுதிச்சடங்கு அக்., 4ல் ஞாயிறு அன்று நடக்க உள்ளது. சிங்கீதம் சீனிவாச ராவ்-ன் மறைவு தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே பேரிழப்பு தான்.