#BREAKING : வெனிசுலா நிலநடுக்க துயரம்: "ஆபரேஷன் அமிஸ்டாட்" மூலம் களமிறங்கி உதவிக்கரம் நீட்டிய இந்தியா..!
வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4300 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்து இருந்தார். தற்போது நிவாரண பொருட்கள் அனுப்பி இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வெனிசுலாவுக்கு நிவாரணம் வழங்கும் இந்தியாவின் திட்டத்திற்கு “ஆபரேஷன் அமிஸ்டாட்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய விமானப்படையின் இரண்டு C17 ரக விமானங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனைப் பிரிவு ஒன்றும், 35 டன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.இந்த இக்கட்டான நேரத்தில் வெனிசுலா அரசிற்கும் மக்களுக்கும் ஆதரவளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
Operation Amistad underway!
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 26, 2026
Two @IAF_MCC C17s took-off today for Venezuela with urgent assistance to support their post-earthquake relief efforts.
The assistance contains an Indian Army @adgpi Field Hospital Unit and over 35 tons of relief supplies, medicines and medical… pic.twitter.com/Dcq8P065tp