×

#BREAKING : இன்று மாலை 4 மணிக்கு முடிவை அறிவிக்கிறது விசிக..! 

 

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஆட்சி அமைப்பதற்காக பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தனது முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

மேலும்  விசிக தலைவர் திருமாவளவனை தவெக தலைவர் விஜய் நேரில் வந்து சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியது 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அறிவிப்பு தள்ளிப்போனது.இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை திருமாவளவன் சந்திப்பார் என்று நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக் கட்சியின் மூத்த நிர்வாகிகள், "தவெக விவகாரம் தொடர்பாக நேற்று மாலை கட்சியின் உயர் நிலைக் கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன என்பதை இன்று மாலை செய்தியாளர்களிடம் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அறிவிப்பார்" என்று தெரிவித்தனர்.

முன்னதாக இன்று காலை 10 மணிக்கு விசிகவின் முடிவு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.