×

#BREAKING || திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்..!!

 

ஒரத்தநாடு சட்டமன்ற பதவியை ராஜினானா செய்த வைத்திலிங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் தனது எம்எல்ஏ பதவியை சற்றுமுன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, தற்போது சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்த அவர், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.