×

#BREAKING : இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை!

 

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை.


ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, போரில் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவில் ஜம்மு-காஷ்மிர், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஷியா முஸ்லிம் ஜமாஅத் சார்பில் அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம் நடந்து வருகிறது. மேலும் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதால், போராட்டங்களை கண்காணிக்க மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.