×

#BREAKING : தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.!

 

ஆற்காடு அருகேயுள்ள கணியம்பாடி தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்.

தமிழகத்தில் செங்கல் சூளைகள் அதிகம் உள்ள வேலூர் மாவட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தங்களை தவெக நிர்வாகிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் சூளைகளுக்கு நேரடியாகச் சென்று மாமூல் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை அருகே செங்கல் சூலை உரிமையாளரிடம் மாமூல்ல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆற்காடு அருகேயுள்ள கணியம்பாடி தவெக ஒன்றிய செயலாளர் இருந்துவந்த விஜயகுமார் எங்கள் அரசு தான் ஆட்சியில் இருக்கிறது என கூறி மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்குவதாக தலைமை உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.