×

#BREAKING : த.வெ.க அரசு பட்ஜெட் தாக்கல்..! வளர்ச்சியே தவெக அரசின் லட்சியம் – அமைச்சர் மரிய வில்சன்..!

 

தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரியவில்சன்.தவெகவின் கொள்கை தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தும், அண்ணா மற்றும் எம்ஜிஆரை சுட்டிக் காட்டியும் பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதியமைச்சர் மரியவில்சன்.

பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் முதலமைச்சர்- நிதி அமைச்சர் மரிய வில்சன்... எல்லாம் கொடுத்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்தவர் முதல்வர் விஜய். பல்வேறு சூழ்ச்சிகளை கடந்து வெற்றி கண்டு ஜன நாயகனாக இந்த அவையில் அமர்ந்திருக்கிறார் என்று மரிய வில்சன் கூறியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் தலமையிலான அரசு, ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்று நிதியமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சொன்னதை மட்டுமின்றி சொல்லாதவற்றையும் இந்த அரசு நிறைவேற்றித் தந்துள்ளது. உண்மையான சமூக நீதியே இந்த அரசின் கொள்கை. தவெகவின் வெற்றி என்பது ஒரு கட்சிக்கான வெற்றி அல்ல. அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றி.

தமிழ்நாட்டில் வரும் 2031-க்குள் 1.31 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக தவெகவின் வெற்றித்தமிழகம் திட்டத்தை இந்த அரசு தீவிரமாக பின்பற்றும்.

இந்த அரசின் முதல் நிதிநிலை அறிக்கை உண்மையான தொலைநோக்கு திட்டத்தை வடிவமைத்துக் காட்டும் என்றார்.

வளர்ச்சியே தவெக அரசின் லட்சியம் – அமைச்சர் மரிய வில்சன்

  • சிங்கப்பெண் படையில் இருந்து டாஸ்மாக் சீர்திருத்தங்கள் வரை பலவற்றை செய்து காட்டியிருக்கிறது தவெக அரசு.
  • இலவச மின்சார யூனிட்டை 200 யூனிட்டாக மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளோம் – நிதியமைச்சர் மரிய வில்சன்
  • கடந்த 3 மாதங்களில் த.வெ.க அரசு மக்களுக்காக ஏராளமான திட்டங்களை கொடுத்து சாதனை படைத்துள்ளது. இந்த தொலைநோக்கு பார்வையை முன்னெடுக்கும் வகையில் வெற்றித் தமிழகம் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது என மரிய வில்சன் கூறியுள்ளார். 2036-க்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை அமைவது இலக்கு என்று கூறியுள்ளார்.
  • சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் நிகழ்த்தி காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய்-மரிய வில்சன்... 

  • குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது த.வெ.க. அரசு.

தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத வகையில் செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. பொதுப்பணித் துறைகளில் டெண்டர் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிய மற்றும் வளர்ந்து வரும் ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசின் டெண்டர்கள் ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்து வந்தது. அந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்டட அனுமதியில் உள்ள பழைய நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. கட்டட அனுமதியில் நிலவி வந்த ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்றார்.

மேலும், மக்கள் வரிப்பணத்தில் ஒரு பைசா தொடவும் மாட்டோம். தொட விடமாட்டோம். மற்றும் இதுவரை தொட்டவர்களையும் விட மாட்டோம். மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பெருக்க அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.