×

#BREAKING : டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றாக செய்தியாளர் சந்திப்பு..!

 

 ராமநாதபுரம் பசும்பொன்னில் செங்கோட்டையன், டிடிவி தினகரன் கூட்டாக செய்தியார்களை சந்தித்தனர். 

அப்போது, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு தேவர் நினைவிடத்தில் சபதம் மேற்கொண்டுள்ளோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிரிந்தவர்கள் ஒன்றிணைந்து அதிமுக ஆட்சியை கொண்டு வர சபதம் எடுத்துள்ளோம் என ஓபிஎஸ் கூறினார். இது கூட்டணியாக அறிவிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருங்கள் என்றும், உங்கள் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு தொடரும் எனவும் ஓபிஎஸ் பதிலளித்தார்.

துரோகத்தை வீழ்த்தவே நாங்கள் மூவரும் இணைந்துள்ளோம் என்று கூறிய டிடிவி தினகரன், சசிகலா வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.