#BREAKING : நள்ளிரவில் MLA காமராஜுடன் ஆளுநர் மாளிகை வந்த டிடிவி தினகரன்..!
தவெக-விக்கு ஆதரவு கொடுப்பதாக அமமுக காமராஜ் பெயரில் போலி கடிதம் கொடுத்ததாக தவெக மீது காவல்துறையிடம் புகார் அளிக்க உள்ளதாக டிடிவி தினகரன் பேட்டி..
அமமுக தலைவர் டிடிவி தினகரன் தன்னுடைய கட்சியைச் சேர்ந்த மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை காணவில்லை என்றும் தமிழகத்தில் விஜய் குதிரை பேரம் நடத்துகிறார் என்றும் தினகரன் கவர்னரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் காணாமல் போன எம்எல்ஏ காமராஜ், கவர்னர் மாளிகை வருவதாக கிடைத்த தகவலை அடுத்து டிடிவி தினகரன் மீண்டும் கவர்னர் மாளிகைக்கு வந்து கவர்னரை சந்தித்தார்கவர்னரை சந்தித்த பின் தினகரன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார்.
‛எங்களது எம்எல்ஏ பெயரில் கொடுக்கப்பட்ட கடிதம் மோசடியானது. தவெக கட்சி தூய கட்சி என்று பேசிக் கொண்டு மோசடியில் ஈடுபடுகிறது' இவ்வாறு தினகரன் தெரிவித்தார் காணாமல் போனதாக தினகரனால் புகார் தெரிவிக்கப்பட்ட மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், அவருடன் இருந்தார்.தன் பெயரில் தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவாக வழங்கப்பட்ட கடிதம் மோசடியானது என்று காமராஜ் குற்றம் காட்டினார்.காமராஜ் பெயரில் போலியான கடிதத்தை கவர்னரிடம் வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தினார். போலீசில் புகார் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
அமமுக எம்எல்ஏ காமராஜ் பேசியதாவது, வாகனத்தில் வந்துகொண்டு இருந்ததால் டிடிவி தினகரனின் தொலைபேசி அழைப்பை எடுக்க முடியவில்லை என விளக்கம் அளித்தார்.