#BREAKING : சீனாவுக்கு 155% வரி விதிக்கப்படும் - டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை..!
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடன் திங்களன்று வெள்ளை மாளிகையில் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது டிரம்ப் இந்த அறிக்கையை வெளியிட்டார். நவம்பர் 1ஆம் தேதி வரை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், சீன பொருட்களுக்கு 155% வரி விதிக்கப்படும். நவ., 1ஆம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
சீனா தற்போதுள்ள 55 சதவீத வரியாக மிகப் பெரிய தொகையை செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
ஒரு சாதகமான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், நவம்பர் 1ஆம் தேதி இந்த வரி விகிதம் 155 சதவீதமாக உயரும் என்று அவர் வலியுறுத்தினார்.
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின்போது ஜி ஜின்பிங்கைச் சந்திக்கத் தான் திட்டமிட்டுள்ளதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறினால், இரு வல்லரசுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்து, உலகப் பொருளாதாரம் ஸ்திரமின்மைக்கு உள்ளாகும் என்பதால், இந்தச் சந்திப்பின் மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.