×

#BREAKING : திரிபுரா மாநில காவல்துறை இயக்குநர் அனுராக் தங்கர் மர்ம மரணம்..! 'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை..!

 

திரிபுரா மாநிலத்தின் டிஜிபி அனுராக் தன்கர் தன்னுடைய அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பாஜக ஆளும் அந்த திரிபுரா மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மக்களை காக்க வேண்டிய காவல்துறையின் உச்சப்பட்ச தலைவராக இருக்கும் ஒருவரே தன்னுடைய பணியின்போது தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விரிவான விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. அவருடைய தற்கொலைக்கு காரணம் என்ன ? யார் காரணம்? என்பது குறித்து விசாரித்து முதல்வருக்கு உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உள்துறை தெரிவித்திருக்கிறது.