#BREAKING : CM ஆகி விஜய் போடும் முதல் கையெழுத்து இதுக்கு தான்..!!
May 6, 2026, 14:08 IST
த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு :
- த.வெ.க. ஆட்சி அமைந்த உடன் 60 வயதை கடந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும்.
- அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்- ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.
- அண்ணன் சீர் திட்டம்- ஒவ்வொரு தங்கைகளின் திருமணத்திற்கும் அண்ணன் சீர் திட்டத்தில் ஒரு சவரன் தங்கம், பட்டுப் புடவை வழங்கப்படும்.
- பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் நலனில் அக்கறை செலுத்த தனி இலாகா உருவாக்கப்படும்.
- காமராஜர் கல்வி உறுதி திட்டம்- 1 முதல் 12-ம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயிலும் வகையில் காமராஜர் கல்வி உறுதி திட்டம். ஒவ்வொரு மாணவ, மாணவியின் பெற்றொர், பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
- கட்டணமில்லா பயணம்- வெற்றிப்பயணம் திட்டத்தில் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம்.
- பெண்கள் பாதுகாப்புக்கு மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் அமைக்கப்படும்.
- பொதுப் போக்குவரத்தில் ஸ்மார்ட் panic பட்டன்- தனியார் ஷேர் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் ஸ்மார்ட் பேனிக் பட்டங்கள் அமைக்கப்படும்.
- அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள்- பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைந்து தீர்ப்பு கிடைக்கும் வகையில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
- ராணி வேலுநாச்சியார் படை- பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைந்து தீர்ப்பு கிடைக்கும் வகையில் புதிய திட்டம்.அமைக்கப்படும்.இந்த படையில் உள்ள பெண்கள் ஆடையில் கேமராவுடன்விலையில்லா சானிடரி நாப்கின் - ரேசன் கடைகள், பள்ளி, கல்லூரிகளில் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின் வழங்கப்படும்.
- ரூ.5 லட்சம் வரையிலான வட்டியில்லா நிதி.
- தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
- கிராமப்புறங்களில் உள்ள ஏழை-எளிய மக்கள் சொந்தவீடு பெறும் வகையில் 5 லட்சம் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்....
- ரேஷன் பொருட்களில் எடைக்குறைவு. தரக்குறைவு, கலப்படம், கடத் தல் ஆகியவற்றை தடுத்து நியாயமான எடையில், தரமான பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் அரிசி தவிர்த்த மற்ற அனைத்து ரேஷன் பொருட்களும் பாக்கெட்டுகளாக வினியோகம் செய்யப்படும். 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும்.
- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம், வெல்கம் கிட் வழங்கப்படும்.
அதன்படி, முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும், அந்த தேர்தல் அறிக்கையில் எந்த அறிவிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவருடைய முதல் கையெழுத்து இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்றதும் வெற்றிப் பயணம் திட்டத்தை நிறைவேற்றும் கோப்பில் கையெழுத்திடுகிறார் விஜய்.
அனைத்து அரசுப்பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கோப்புகள் தலைமைச் செயலகத்தில் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், தவெக ஆட்சியின் முதல் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.