#BREAKING : வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் தமிழகத்தின் தற்போதைய நிலை இது தான்..!
பெங்களூரு உணவக உரிமையாளர்கள் சங்கம் திங்கட்கிழமை (மார்ச் 9) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தங்களுக்கு கிடைக்க வேண்டிய சமையல் எரிவாயு சிலிண்டர்களில் 20 விழுக்காடு மட்டுமே விநியோகம் வந்துள்ளதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் உணவகம் மற்றும் விடுதிகளை மூடும் சூழல் ஏற்படும் எனவும் அது தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய ஐடி கேந்திரமான பெங்களூரில் ஓட்டல்களும், விடுதிகளும் மூடப்பட்டால் அது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு சென்று பணிபுரியும் லட்சக்கணக்கானோர் விடுதிகளில்தான் தங்கியுள்ளனர். அவர்களில் பலர், தங்கள் உணவுத் தேவைக்கு ஓட்டல்களையே நம்பியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், அவை மூடப்பட்டால் அவர்களின் நிலைமை மோசமாகிவிடும்.
அதுமட்டுமின்றி, பெங்களூரை தொடர்ந்து சென்னை, ஹைதராபாத், டெல்லி போன்ற பெருநகரங்களிலும், பிறகு பல்வேறு மாவட்டங்களிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இப்போதே வீட்டு உபயோக சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் கால அளவு 15 நாட்களில் இருந்து 21 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் தட்டுப்பாடு அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
இதனிடையே, சிலிண்டர் விநியோகத்தில் ஓட்டல்களை காட்டிலும் வீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், உணவகங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வணிக சிலிண்டர்களை வழங்க வேண்டும் என ‘தமிழ்நாடு உணவக சங்கம்’ பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை கடிதம் எழுதி இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் 3 மாதங்களுக்கு தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் யாரும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் தமிழகத்தின் தற்போதைய நிலை இது தான்
சேலம் மாவட்டத்தில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டத்தில் வணிக சிலிண்டர்கள் விநியோகம் குறைப்பு...தினமும் சுமார் 2,000 வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்டும் நிலையில் தற்போது 200 மட்டுமே விநியோகம்
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் வெரைட்டீஸ் கொடுக்க முடியவில்லை : ஆனந்தா ஹோட்டலில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை