#BREAKING : இது 2வது முறை..! நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
கரூர் உயிர் பலி சம்பவத்திற்கு பின், விஜய் வீட்டுக்கு கூடுதல்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து, கார் உள்ளிட்ட வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன.
இந்நிலையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி மூலம் தொடர்ப்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விஜய் வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.ஏற்கனவே கரூர் துயர சம்பவத்திற்கு பிறகும் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது.