☰
×

#BREAKING : இசை அமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு..! 

 

பிரபல தமிழ் சினிமா இசையமைப்பாளர் தேவா (75) இன்று மாரடைப்பால் காலமானார். கானா பாடல்களை தமிழ் சினிமாற்கு அறிமுகப்படுத்திய புகழ் பெற்றவர். தேனிசை தென்றல் தேவா என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இசையமைப்பாளர் தேவா கடைசியாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய சாருகேசி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் தேவா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினிகாந்தை மிகப்பெரும் கமர்ஷியல் நாயகனாக நிலைநிறுத்திய அண்ணாமலை, பாட்ஷா ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் தேவா.

மேலும், ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்டுக்கு இன்று வரை தேவாவின் பின்னணி இசை தான் ஒலித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் வெளியான, ஜெயிலர் 2 படத்திலும் ரஜினிகாந்த் டைட்டில் கார்டில் தேவாவின் இசை ஒலித்தது. இது அவரின் தனிச்சிறப்பாக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.


இந்நிலையில் இசை அமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இசை உலகிற்கு தேவா ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் இருதுசடங்கு நடைபெறும் என்ன அறிவிக்கப்பட்டுள்ளது