#BREAKING: செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு..!!
Updated: Aug 5, 2026, 14:00 IST
தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அடுத்த மாதம் வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
செப்.8ம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பின் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதம் நாளை மறுநாள் முதல் நடைபெறும். செப்.7ல் காவல், தீயணைப்பு, மீட்புப் பணிகள் மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜய் பேசுகிறார்.
மாலை 6 வரை தேவைப்பட்டால் சட்டமன்றம் நடைபெறும் என்றும் கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.