×

#BREAKING : பரபரக்கும் அரசியல் களம்... சசிகலா உடன் ராமதாஸ் கூட்டணி?

 

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதி பங்கீட்டை முடித்து வேட்புமனு தாக்கலுக்கு ஒவ்வொரு கட்சியும் தயாராகி வருகின்றன. ஆனால் ராமதாஸ் தலைமையிலான பாமக தரப்பு அணி இதுவரை கூட்டணியை அறிவிக்கவில்லை. சசிகலாவை தவிர மாற்றுக் கட்சியினர் தைலாபுரம் தோட்டத்துக்கு கூட்டணி பேச வராத நிலையில், கடைசியாக தவெக கதவும் மூடப்பட்டதால் நெருக்கடியான சூழலுக்கு ராமதாஸ் தள்ளப்பட்டு உள்ளார்

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, வன்னியர் வாக்கு வங்கி அதிகம் உள்ள வட மாவட்டங்களில் சுமார் 40 தொகுதிகள் வரை பாமக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்ட சசிகலா மற்றும் ராமதாஸின் இந்த திடீர் அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.