×

#BREAKING : இபிஎஸ்க்கு அடுத்த ஷாக்..! தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சார்கள்..!

 


சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக-வில் ஏற்பட்ட மிகப்பெரிய உட்கட்சி மோதல் காரணமாக பலரும் அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்து வருகின்றனர். இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமியில் கட்சியில் இருந்து பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான எம்சி சம்பத், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, பெஞ்ஜமின், எம்எஸ்எம் ஆனந்தன் ஆகியோர் இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் அமைச்சர்களான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், எம்எஸ்எம் ஆனந்தன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.அமமுகவின் முன்னாள் எம்எல்ஏக்களும் தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். 

பாப்பிரெட்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, சங்ககிரி முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ மான்ராஜ், சிவகாசி முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், கலசப்பாக்கம் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர். 

அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.