×

#BREAKING : இன்று நடைபெறவிருந்த தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ஒத்திவைப்பு..! 

 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக தனது அரசியல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், வரும் 27ஆம் தேதி அதாவது இன்று அக்கட்சியின் தலைவர் விஜய், வேட்பாளர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. மாமல்லபுரத்தில், விஜய் தலைமையில் நடக்கவுள்ள கூட்டத்தில், முதற்கட்டமாக 110 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தபடவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது

தேர்தல் ஆணையம் சார்பில் அனுமதி அளிக்கப்படாத நிலையில் கூட்டத்தை ஒத்திவைத்தது தவெக.தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறும் விதிமுறைகள் மற்றும் சில தொழில்நுட்பக் காரணங்களால், இறுதி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, நாளை மறுநாள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்த அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் அனைவரையும் விஜய் முறைப்படி அறிமுகம் செய்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.