×

#BREAKING : இளைஞர்களின் கனவே தமிழகத்தின் எதிர்காலம்..! - 'என் கனவு என் எதிர்காலம்' புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

 

இளைஞர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்ய இளைஞர் கனவு தளத்தைத் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.254.29 கோடி மதிப்பிலான 29 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் 'என் கனவு என் எதிர்காலம்' திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கனவுகளை நேரடியாக கேட்டு அவற்றின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தும் நோக்குடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 9 அன்று ‘உங்க கனவு சொல்லுங்க’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின்  கனவுகளை நிறைவேற்றும் வகையில் கருத்துகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த முயற்சியின் சிறப்பு விரிவாக்கமாக இளைஞர்களின் கனவுகள் மற்றும் எதிர்கால இலக்குகளை நேரடியாகப் பதிவு செய்து அவற்றை கொள்கை உருவாக்கத்தில் இணைக்கும் நோக்குடன் ‘என் கனவு, என் எதிர்காலம்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, 18 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களிடமிருந்து கருத்துகளைப் பெற Youth Dream Portal (இளைஞர் கனவு தளம்) தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளம் 20 நாட்கள் செயல்பாட்டில் இருக்கும். இளைஞர்கள் QR கோடு அல்லது இணைய இணைப்பு மூலம், தங்களின் உடனடி தேவைகள் மற்றும் எதிர்கால கனவுகள் / இலக்குகள் குறித்து இந்தத் தளத்தில் பதிவு செய்யலாம். இவை 2030-ஐ நோக்கிய கொள்கை திட்டமிடலுக்கு அடிப்படையாக அமையும்.

இந்த தளம் மூலம் கொள்கைகள் உருவாகும் முன்பே இளைஞர்கள் தங்கள் கருத்துகளை வழங்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு மக்கள் பங்கேற்பு ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இது அமைகிறது.

இளைஞர் கனவு தளத்தை இந்த இணையதள முகவரியில் அணுகலாம்:https://enkanavu.tn.gov.in


விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.254.29 கோடி மதிப்பிலான 29 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் 'என் கனவு என் எதிர்காலம்' திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ரூ.390 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* சோழர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் வர்த்தக நகராக இருந்த சிறப்புக்குரிய நகரம் திண்டிவனம்.

* சென்னையின் நுழைவு வாயிலாக இருப்பது திண்டிவனம்.

* தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறோம்.


* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் மூலம் பெறப்பட்ட 4.5 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்பட்டது.

* மக்களின் தேவைகளை உன்னிப்பாக கவனித்து விரைவாக நிறைவேற்றி வருகிறோம்.

* மக்களின் தேவையை கண்டறிந்து அவர்கள் இடத்திற்கே சென்று தீர்வு காணப்படுகிறது.

* உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முடக்க சிலர் உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.

* பல தடைகளை தாண்டி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது.

* உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை 10,000 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

* விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தது மட்டுமின்றி சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

* முதல்வரின் முகவரி திட்டத்தின் வாயிலாக 1.49 கோடி மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம்.

* அரசு சேவைகள் மக்களுக்கு தடையின்றி, விரைவாக கிடைக்க வேண்டும்.

* மக்களின் குறைகள், தேவைகளை உன்னிப்பாக கவனித்து நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.

* உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஊரக பகுதிகளில் 15 துறைகளும் நகரப்பகுதிகளில் 13 துறை சார்ந்த முகாம்கள் நடத்தப்பட்டது.

* ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டை, சொத்துவரி பெயர் மாற்றுதல், பட்டா கேட்டு அதிக மனுக்கள் வந்தது.

* பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் 40 நாட்களில் தீர்வு காணப்பட்டது.

* விதிகளை தளர்த்தி 16,94,000 பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.