#BREAKING : மாதத்தின் முதல் நாளே ஷாக்..!! தங்கம் விலை சவரனுக்கு 3,040 உயர்வு!
போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாற்றம் கண்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த காரணத்தினால், தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி, டாலர் மதிப்பு அதிகரிப்பும், தங்கம் விலை குறைவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
போர் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், போர் நிறுத்தம் குறித்து பேச தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியதிலிருந்து தங்கம் விலை சற்று ஏற தொடங்கியது. குறிப்பாக, 5 நாட்கள் வரை ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்ததிலிருந்து தங்கம் விலை ஏறியது. மேலும், 10 நாட்களுக்கு தாக்குதலை தள்ளி வைப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தொடர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.
மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. சென்னையில், 22 கேரட் தங்கம் கிராமுக்கு 380 உயர்ந்து 14,050-க்கும், சவரனுக்கு 3,040 அதிகரித்து 1,12,400-க்கும் விற்பனையாகிறது.