×

#BREAKING : ஆம்ஸ்ட்ராங் சம்பவம் ! திமுக முக்கிய புள்ளியின் மகன் கைது..!

 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார்.பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கிடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கிடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இவரது தந்தையான குமரேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.