×

#BREAKING : போர்க்களமாகும் தஞ்சை..! முதல்வர் விஜயின் உருவ பொம்மை எரிப்பு..! 

 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து தஞ்சையில் திமுக தொண்டர்கள் முதல்வர் விஜயின் உருவ பொம்மை எரிப்பு


தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உரையை முன்னிறுத்தி, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தத் தகவல் பரவிய சில நிமிடங்களிலேயே தஞ்சாவூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முக்கியச் சாலைகளில் திரளத் தொடங்கினர்.

அரசுக்கு எதிராகவும், காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்தும் கண்டனக் கோஷங்களை எழுப்பிய தொண்டர்கள், இது தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்தகைய கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினர்.

போராட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய்யின் உருவப் பொம்மையைக் கையில் ஏந்தி வந்த திமுக தொண்டர்கள், அதற்குத் தீவைத்து எரித்துத் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

உடனே சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தீயை அணைக்க முயன்றதால், திமுக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு மற்றும் காரசார விவாதம் ஏற்பட்டது.

#BREAKING | போர்க்களமாகும் தஞ்சை - முதல்வர் விஜய் உருவ பொம்மை எரிப்பு pic.twitter.com/RTjmxFb4EG

— Spark+ (@SparkPluz_) August 4, 2026