#BREAKING : தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் (Tamil Nadu Olympic City) அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்..!
சென்னையில் உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த ஏதுவாக ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும். மோட்டார் ரேஸ் கார் சிட்டி உருவாக்கப்படும். சர்வதேச அளவிலான கார் ரேஸ் வசதிகள், கட்டமைப்புகள், பயிற்சிகள் வழங்கப்படும். விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த மோட்டார் சிட்டி அமைக்கப்படும் என்றார்.
உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் (High Performance Training Centre), விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.
பயன் :
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லவும்,ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் உலகத்தரம் வாய்ந்த
ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாகத் திகழும்.
#WATCH | "சென்னையில் சர்வதேச தரத்துடன் ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் விளையாட்டு நகரம் அமைக்கப்படும்"
— Sun News (@sunnewstamil) September 3, 2026
110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு#SunNews | #TVKVijay pic.twitter.com/yQZyi9ToXD