×

#BREAKING : தமிழ்நாடு உள்துறை செயலாளர் திடீர் மாற்றம்..!  

 

தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாய்குமார் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில்  தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமாரை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக மணிவாசனை புதிய உள்துறை செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்து மாலை 5 மணிக்குள் பதவி ஏற்க உத்தரவிட்டுள்ளது. 

சுற்றுலாத்துறை செயலாளராக இருந்த மணிவாசனை உள்துறை செயலாளராக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த மாற்றத்திற்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.