#BREAKING : 700 உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு..!!
Aug 3, 2026, 10:33 IST
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்தவுடன் மின்வாரியத்தில் ஒரே சமயத்தில் 300 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 2வது கட்டமாக உதவி பொறியாளர்களுக்கு தற்போது பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு உதவி பொறியாளர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 700 பேர் பதவி உயர்வை பெற்றுள்ளனர். பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காலியாக இருக்கும் உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை ஒதுக்கப்படுகிறது.
மேலும், பதவி உயர்வு பெற்றவர்கள் விரும்பும் இடங்களில் பணிகளை ஒதுக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.