#BREAKING : தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு..!
Updated: Nov 13, 2025, 13:58 IST
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், 16 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள். இதனால், தமிழக அரசுக்கு ரூ.1,829 கோடி கூடுதலாக செலவாகும். கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.