#BREAKING : சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்வு - முதல்வர் விஜய் ..!
Updated: Aug 15, 2026, 09:29 IST
தேசியக்கொடி ஏற்றி வைத்து முதல்வர் உரையாற்றினார்.. சுதந்திர தினத்தை கொண்டாடும் தமிழக மக்களுக்கு நல்வாழ்த்துகள். தங்களது உயிரை, வாழ்க்கையை இழந்து சுதந்திரம் வாங்கித்தந்த தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கம். உடைந்து நொறுங்கும்போதுதான் சுதந்திரம் கிடைக்கும், அதை கெட்டியாகப் பிடித்து முன்னேறுகிறோம். அடிமையாக இருக்கிறோம் என்பது புரிந்தாலே ஒற்றுமை வந்துவிடும். முன்னேறும்போது, லஞ்சம், ஊழல் போன்றவற்றிலிருந்து காப்பதும் விடுதலைக்கு சமமானது என்று முதல்வர் விஜய் உரையாற்றினார்.
மேலும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்வு என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். முன்னாள் படை வீரர்களின் மகள்களுக்கான திருமண நிதி உதவி ரூ.25,000ல் இருந்து ரூ.50,000ஆக உயர்வு என்று அவர் அறிவித்துள்ளார்.