×

#BREAKING : கரூரில் த.வெ.க சார்பில் நினைவு சின்னம் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்..!

 

 

"எவ்வளவு உயரத்திற்கு போனாலும் சில வலிகள், காயங்கள் மறக்க முடியாதது. எனக்கு அதிக வலி, காயம் தந்தது கரூர் சம்பவம் "

கரூரில் தவெக சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில்,நிகழ்ச்சியில் உரையாற்றத் தொடங்கினார் முதலமைச்சர் விஜய். என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்களே என்று பேசத் தொடங்கினார். அப்போது அவர், கரூரில் அன்றைய தினம் நடந்த நிகழ்வு என் மனதில் நீங்காத வடுவாக உள்ளது என்றார். கரூர் சம்பவம் என் மனதில் வலியையும், காயத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.


பெரம்பலூர் இருந்து அரியலூர் சென்ற போது காவல்துறையினர் எங்களை எச்சரித்தனர். அவர்கள் கூறியதை கேட்டு நாங்கள் உடனடியாக திரும்பினோம். இதற்காக அரியலூர் மக்களிடம் மன்னிப்பும் கேட்டோம்.

நாமக்கல்லில் இருந்து கரூர் வந்த போது, காவல்துறையினர் எங்களை அலர்ட் பண்ணியிருக்கலாம். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. போலீசார் நினைத்திருந்தால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கலாம்.நாமக்கல் பயணத்தை முடித்து கரூர் வந்தபோது பிரச்னை எனில் காவல்துறை Alert பண்ணியிருக்கலாமே

கரூரில் நடந்தது என்ன? நெடுஞ்சாலையில் இருந்து எங்களே போலீசாரே அழைத்து வந்து சம்பவம் நடந்த இடத்தில் விட்டனர். இதில் போலீசார் மிகப் பெரிய நாடகம் நடத்தினர் என்று முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டினார்.கரூர் நெரிசலின் போது போலீசாரின் நோக்கம் தெரியாமல் நம்பிவிட்டேன்.இதெல்லாம் யார் சொல்லி நடந்தது. போலீசாரை அப்படி நடக்க சொல்லி அழுத்தம் கொடுத்தது யார்.. அந்த கரூர் சம்பவத்தில் நாம் தங்க பிள்ளைகளை இழந்துள்ளோம். பச்ச பிள்ளைகளை இழந்துள்ளோம். குடும்ப உறவுகளை இழந்து வலியோடு இருக்கும் என்னை ஏளனமாக பேசுகிறீர்களே.. பழியை என் மேல போடுகிறீர்களே.. ஓடி ஒளிந்தேன் என சொல்கிறீர்களே.. 

வாய் ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?..  அரசியல் ஆதாயம் தேடுகிறீர்களே இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?.. மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் விஜய். அவர்களை காக்க வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவன் அல்ல.. நமக்கு இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு கால காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு நிரந்தரமாக பதிலடி கொடுக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த பதிலடி மட்டும் போதாது. 

ஒருவன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மனதளவில் சில காயங்கள், வலிகளை மறக்க முடியாது எனக்கு அனைத்தையும்விட வலியும், காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம் தான்.

‘தாய் மாமன் சீர் சீக்கிரம் வரும். நான் ரியல் தாய்மாமன், ரீல் தாய்மாமன் இல்ல...’ 

கரூரில் நெரிசலில் இறந்தவர்கள் நினைவாக நினைவு சின்னம் அமைக்கப்படும்- விஜய்

ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லயும் பார்ட்டி பன்ட், கட்சி நிதிங்கற பேர்ல அடிக்கிற கொள்ளையாகட்டும்... தீய சக்தியா இருந்தாலும் சரி, தீர்ந்து போன சக்தியா இருந்தாலும் சரி, ரெண்டு பேரும் மாறி, மாறி இதையே தான் செஞ்சிட்டு இருக்காங்க...

கட்சி நிதி என்றவுடன் சட்டசபையில் ஓடினார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம். சென்னையில் ஒரு பாலம் கட்டுவதில் ஊழல் செய்துள்ளதைக் கண்டுபிடித்து ரத்துச் செய்துள்ளோம். ஊழலில் ஊறிப்போனவர்கள் தொடர்ந்து கதறிக் கொண்டிருக்கிறார்கள். தோண்ட தோண்ட ஊழல் வந்துக் கொண்டே இருக்கிறது. 

லஞ்சம், ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாதவர்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று பாருங்கள். ஒரு பைசா செலவில்லாமல் எல்லாம் நடக்கிறது. எங்களுக்கு மரியாதை கொடுப்பதாக மக்களே சொல்கிறார்கள். மக்கள் மனதில் இருக்கும் சந்தோசத்தைப் பார்த்ததை விட வேறு என்ன வேண்டும் சொல்லுங்கள் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். 

 

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/Mtn8HerwQ80?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Mtn8HerwQ80/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">