×

#BREAKING : பிப்.5ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!

 

2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தற்போது பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 5ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிப்.5ல் அமைச்சரவை கூடுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.