×

#BREAKING : தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!! வெளியான முழு லிஸ்ட்! 

 

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சார்ந்த திட்டப் பலன்களும் பொதுமக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.

இயற்கைச் சீற்றம். நோய்த்தொற்று மற்றும் பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளில், இந்தத் திட்டப் பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து, விரைவுபடுத்தும் வகையில் ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக (Monitoring Officers) நியமித்து அரசு கண்காணித்து வருகிறது.


இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமைச்சர் பெருமக்களையும் இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, அமைச்சர் பெருமக்களை. அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும். இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும். வருவாய் மாவட்ட வாரியாக, அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.

அமைச்சர் - மாவட்டம்

* ஆனந்த் - விழுப்புரம், கடலுார்

* ஆதவ் - சென்னை, திருவண்ணாமலை

* வெங்கடரமணன் - மயிலாடுதுறை

* குமார் - திருவள்ளூர்

* மரியவில்சன் - திருநெல்வேலி

* ராஜ்மோகன் - பெரம்பலுார்

* தென்னரசு - காஞ்சிபுரம்

* ரஞ்சித்குமார் - திருப்பத்துார்

* சரத்குமார் - செங்கல்பட்டு

* வன்னி அரசு - கள்ளக்குறிச்சி

* காந்திராஜ் - ராணிப்பேட்டை

* ராஜ்குமார் - தர்மபுரி, அரியலுார்

* ஷாஜஹான் - நாகை

* வினோத் -தஞ்சாவூர்

* ரமேஷ் - திருச்சி

* விஜயலட்சுமி - கரூர்

* லோகேஷ் - நாமக்கல்

* அருண்ராஜ் - திருப்பூர்

* கமலி - நீலகிரி

* விஜய் பாலாஜி- வேலுார்

* செங்கோட்டையன் - ஈரோடு

* சம்பத் குமார்- கோவை

* நிர்மல் குமார்- மதுரை, தேனி

* முகமது பர்வேஸ்- புதுக்கோட்டை

* பிரபு - சிவகங்கை

* கீர்த்தனா - கிருஷ்ணகிரி

* ஜெகதீஸ்வரி - விருதுநகர்

* விஸ்வநாதன் - திருவாரூர்

* ஸ்ரீநாத் - துாத்துக்குடி

* மதன்ராஜா - ராமநாதபுரம்

* விஜய் தமிழன் பார்த்திபன்- சேலம்

* ராஜேஷ் குமார்- கன்னியாகுமரி

* ராஜிவ் - தென்காசி

* விக்னேஷ் - திண்டுக்கல்